• Aug 11 2025

தமிழ் திரையுலகிற்கு கிடைத்த சர்வதேச தரத்திலான இயக்குனர்! பாராட்டிய ராகவா லோரன்ஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் அரண்மனை 4, கருடன், மகாராஜா போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த வரிசையில் தற்போது தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. ராயன் திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் தான் ஆனபோதிலும் தற்போது வசூலில் 75 கோடிகளை அள்ளிக் குவித்துள்ளது.


இந்த நிலையில், ராயன் படத்தை பாராட்டி பேசி உள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். அதன்படி அவர் கூறுகையில், நேற்று ராயன் திரைப்படம் பார்த்தேன். தனுஷ் மிகச் சிறப்பாக இயக்கியும் நடித்தும் உள்ளார். சகோதரர் எஸ்.ஜே சூர்யா தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

துஷாரா விஜயன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். தமிழ் திரையுலகுக்கு ஒரு சர்வதேச தரத்திலான இயக்குனர் கிடைத்துள்ளார். தனுஷின் ஐம்பதாவது படத்திற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement