விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் 'கிங்டம்'. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இசைஞானி அனிருத் ரவிச்சந்தர்.
படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றிய அனிருத், விழாவில் பேசும் போது, தனது 13 ஆண்டுகள் நீண்ட சினிமா பயணத்தை, தெலுங்கு ரசிகர்களிடம் கிடைத்த அன்பை, மேலும் அவர்களால் தான் பெற்ற ஒரு வித்தியாசமான பெயர் என்பன குறித்தும் சிறப்பாக பேசியிருந்தார்.
அவரின் உரை, உணர்வும், நகைச்சுவையும் கலந்து இருந்தது. இந்த உரை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அனிருத், “3 படத்தின் மூலம் சினிமாவில் என் பயணம் தொடங்கியது. அது ஒரு தமிழ் படம். ஆனால் அதே நேரம் இன்று வரை, தெலுங்கு தேசம் எனக்கு அளித்த அன்பு கணக்கிலே வராத அளவுக்கு அதிகம். எனக்கு இங்கே நண்பர்களை விட குடும்பமே அதிகம்! இப்போது 13 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன். ஆனால் எப்போதுமே நான் உங்கள் 'அனிருத்'தான்." எனக் கூறியிருந்தார்.
மேலும், நான் உங்கள் பக்கோடு எனவும் தெரிவித்தார். இதற்கான காரணம், தெலுங்கு ரசிகர்கள் இவரை பக்கோடு [ஒல்லிக் குச்சி] என நக்கலாக கூறுவதனாலேயே அனிருத் இப்படி தெரிவித்தார்.
Listen News!