• Jan 18 2025

ஐயா என்னை மன்னிச்சிடுங்க.. இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருடிய திருடனின் கடிதம்..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

 இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் திருடு போன நிலையில் தற்போது அந்த திருடன் மீண்டும் திருடிய பொருட்களை கொண்டு வந்து வைத்துவிட்டு மன்னிப்பு கடிதம் எழுதிவிட்டு சென்றதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் ’காக்கா முட்டை’ ’கடைசி விவசாயி’ உள்ளிட்ட தேசிய விருது பெற்ற படங்களை இயக்கியவர் மணிகண்டன். இவரது தேனி வீட்டில் சமீபத்தில் திருட்டு கும்பல் நுழைந்ததாகவும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் நகை மட்டுமின்றி அவர் வாங்கிய தேசிய விருதுகளையும் திருடி சென்றதாகவும் கூறப்பட்டது.

இயக்குனர் மணிகண்டன் சென்னையில் உள்ள வீட்டில் இருக்கும் நிலையில் அவரது கார் டிரைவர் மற்றும் உதவியாளர் மட்டுமே தேனியில் இருந்ததால் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.



இந்த நிலையில் ஊடகங்களில் மணிகண்டன் வீட்டில் திருடு போன செய்தி வெளியானதை அடுத்து  மணிகண்டன் வீட்டில் திருடிய திருடன் தேசிய விருது பதக்கங்களை மட்டும் அவரது வீட்டின் முன் வைத்து விட்டு அதில் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார்.  ’ஐயா எங்களை மன்னித்து விடுங்கள், உங்கள் உழைப்பு உங்களுக்கு’ என்று அதில் எழுதப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குனரின் வீடு என்பது தெரியாமல் திருடி விட்டதாக அந்த திருடன் மன்னிப்பு கடிதம் எழுதி விருதுகளையும் திருப்பி அளித்து உள்ளார்.  இருப்பினும் நகை மற்றும் ரொக்கம் இன்னும் கிடைக்காததால் காவல்துறையினர் அந்த திருடனை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement