• Feb 23 2025

மார்பகம் பற்றி கேள்வி கேட்ட நெட்டிசன்.. செருப்படி பதில் கொடுத்த ‘எதிர்நீச்சல்’ கனிகா

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

 சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ என்ற சீரியலில்  ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை கனிகா சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஒருவர் மார்பகங்கள் குறித்து கொச்சையாக கேட்ட கேள்விக்கு செருப்படி பதில் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை கனிகா, அஜித் நடித்த  ’வரலாறு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்போது அவர் ’எதிர்நீச்சல்’ சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் அவரது ஈஸ்வரி குணசேகரன் கேரக்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஏராளமான ஃபாலோயர்களை வைத்துள்ள கனிகா, அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ரசிகர்களின் சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஒருவர் ’உங்களுடைய மார்பகம் பெரிதாக இருப்பது ஏன்? என்று கொச்சையாக கேள்வி கேட்டது அடுத்து கனிகா செருப்படி பதில் கொடுத்து இருக்கிறார்.

‘உங்கள் வீட்டுப் பெண்களுக்கு இருப்பது போல் தான் என்னிடமும் இருக்கிறது, எதற்காக இப்படி மோசமான கேள்வி கேட்கிறிர்கள் என்று தெரியவில்லை. ஹார்மோன் மாற்றம் தான் பெண்களுக்கு மார்பகம் பெரிதாக இருப்பதற்கு காரணம். திருமணம் ஆகி குழந்தை பெற்று  பாலூட்டும்  தாய்மார்களுக்கு மார்பகம் பெரிதாகத்தான் இருக்கும். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் இந்த மாற்றம் எனக்கும் இருக்கிறது, உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கும் இதே போல் தான் இருக்கும்.

இப்படி கொச்சையாக கேள்வி கேட்பவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று யோசித்து தோன்றுகிறது. நான் கவர்ச்சி உடைய அணிந்தால், இந்த வயதில் இதையெல்லாம் தேவையா? என்று கேட்கிறீர்கள். எனக்கு பிடித்த ஆடையை நான் அணிகிறேன், அந்த சுதந்திரம் எனக்கு இருக்கிறது, அதை எப்படி பார்க்க வேண்டும் என்கிற வரைமுறையும் எனக்கு உள்ளது, எனது குழந்தைக்கு நான் அப்படித்தான் சொல்லி வளர்க்கிறேன்’ என்று பதில் அளித்துள்ளார்.

நடிகை கனிகாவின் இந்த துணிச்சலான பதிலுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.

Advertisement

Advertisement