• Apr 26 2024

"என் வாழ்க்கையை என்னால் வாழ முடியாமல் செய்து விட்டனர்"-நடிகர் விமல்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பசங்க திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் விமல்.இத் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இத்திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மீனாட்சி சுந்தரம், இப்படத்தில் இவர் கைபேசியில் “இங்கிட்டு மீனாட்சி அங்கிட்டு யாரு” என்று பேசிய வசனம் மிகப் பிரபலமானது. இப் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் பெற்றார்.

இந்நிலையில் படத் தயாரிப்பு தொடர்பாக நடிகர் விமலுக்கும், தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் இடையில் ஏற்கனவே பிரச்னை உள்ளது.

மேலும் இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நடக்கின்றது. இந்நிலையில், நடிகர் விமல் அளித்த பேட்டி ஒன்றில், 'என் வாழ்க்கையை இன்னொருவர் வாழ்ந்துள்ளார். இதற்கு, நானும் அனுமதி அளித்துள்ளேன் என்பது, தாமதமாகவே தெரிந்தது. மூன்றாண்டுகளாக, என் வாழ்க்கையை என்னால் வாழ முடியாமல் செய்து விட்டனர்' என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து, சிங்காரவேலன் தெரிவித்துள்ளதாவது…

விமல் சொன்ன கருத்துகள் வருத்தமளிக்கின்றன. வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 'விமல் வழக்கை, நேர்மையாக விசாரிக்க வேண்டும்' என, நீதிமன்றமே கூறியுள்ளது. முதல்வரை சந்தித்து நான் மனு கொடுத்துள்ளேன். என் கடிதம் உரிய துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்.

என்னை விட விமலுக்குத் தான் மனசாட்சி உறுத்த வேண்டும். விமல் வாழ்க்கையை நான் தட்டிப் பறிக்க வேண்டிய அவசியமே இல்லை. மன்னர் வகையறா படத்திற்கு பின், விமல் நடித்த மூன்று படமும் மிகப்பெரிய தோல்வி. தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் பெரும் நஷ்டம்; விமல் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அவர்தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement