• May 05 2024

மூன்று தேசிய விருதுகளை வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய அரசு ஆண்டு தோறும், நாடு முழுவதும் வெளியாகும் மிகச் சிறந்த திரைப்படங்கள் மற்றும் படைப்புகளை கௌரவிக்கும் விதமாக தேசிய விருதுகளை அளித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் டெல்லியில் 68-வது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்திருந்த 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்கு 5 விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. அதே போல யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படத்திற்கும் தேசிய விருது கிடைக்கப் பெற்றுள்ளது.

இது தவிர வசந்த் இயக்கி இருந்த 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' உள்ளிட்ட திரைப்படங்கள் ஏராளமான விருதுகளை அள்ளி இருந்தது.இதில், வசந்த் இயக்கி இருந்த "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் படம் என்ற தேசிய விருது வழங்கப்பட்டது.

அதே போல, இந்த படத்தில் அசத்தலாக நடித்திருந்த நடிகை லட்சுமி பிரியா சந்திரமவுலிக்கு சிறந்த துணை நடிகை விருதும், படத்தின் எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத்திற்கு சிறந்த எடிட்டர் என்ற தேசிய விருதும் கிடைத்துள்ளது.

மிகச் சிறந்த படைப்பாக தமிழில் வெளிவந்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம், 3 தேசிய விருதுகள் வென்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement