கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டத்தில் 500-1000 பேருக்கு மேல் குறுகிய இடத்தில் சிக்கியதால் மக்களுக்கு இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அங்கு இருந்த பெண்ணொருவர் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது
அதன்படி அவர் கூறுகையில், கூட்டத்தில் கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் சிக்கல் ஏற்பட்டதால் பலர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மரத்தில் ஏறி விழுந்தும் உயிரிழந்தனர்.
என்னுடைய வீட்டின் மீதும் சில கட்சித் தொண்டர்கள் ஏறினார்கள். இதனால் எங்க வீட்டில் உள்ள ஓடு உடைந்து விட்டது. இப்படி ஒரு கட்டுக்கடங்காத கூட்டத்தை நான் எங்கும் பார்க்கவில்லை. அதில் ஒன்பது வயது குழந்தை அழைத்து வந்து ஆடுகின்றார்கள். காவல் துறையினரின் பாதுகாப்பு அதிகமாக இருந்திருக்க வேண்டும்.
காலை ஏழு மணியிலிருந்து இரவு 7 மணி வரை அங்கு இருந்துள்ளோம். ஆனால் அங்கு உணவு கொடுத்தார்களா? தண்ணீர் கொடுத்தார்களா? எதுவுமே இல்லை. எப்படி அங்கு நின்று கொண்டிருக்க முடியும்? வருகிறேன் என்று அறிவித்தார்கள்.. ஆனால் எந்த வசதியும் செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கரூரில் நடைபெற்ற பரப்புரையின் இடம் தற்போது கலவர கூடாரமாக காட்சியளிக்கின்றன. ஆங்காங்கே செருப்புகளும், குப்பைகளும், உடைந்த கதிரைகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!