தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ஆன இளைய தளபதி விஜய், தீவிரமாக அரசியலில் இறங்கி பல ஊர்களுக்கு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். அவர் நேற்று கரூர் சென்றபோது அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் கூடிய நிலையில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
நாமக்கல்லில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு விஜய் அடுத்ததாக கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள், பொது மக்கள் குவிந்ததால் விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிலர் மயங்கியும் விழுந்தனர்.
விஜய் உரையை முடித்துக் கொண்டு கிளம்பும்போது அங்கு இருந்தவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு மயக்கம் அடைந்து விழுந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். அதில் பத்து குழந்தைகளும் அடங்குகின்றனர். எனினும் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
கரூரில் நடந்த இந்தச் சம்பவங்கள் தொடர்பில் வெளியாகும் தகவல்கள் மனதை நொறுங்க செய்துள்ளன. தற்போது இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் தொடக்கம் நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் விஜயை அரெஸ்ட் பண்ண வேண்டும் என நடிகை ஓவியா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த சம்பவத்திற்கு காரணமான விஜயை கைது செய்ய வேண்டும் என பலர் கூறி வரும் நிலையில், தற்போது நடிகை ஓவியாவும் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!