• Jan 18 2025

சீக்கிரட் ரூமில் ஜோவிகா இல்லை, இப்படியொரு வாய்ப்பு கிடைச்சிருக்கு- வெளிவந்த உண்மைத் தகவல்- அப்போ அதெல்லாம் பொய்யா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7ல் இந்த வாரம் நாமினேஷனில் தினேஷ், அனன்யா ராவ், விசித்ரா, மணி, கூல் சுரேஷ், பூர்ணிமா, விக்ரம் மற்றும் ஜோவிகா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் காணப்பட்டது. 

அதன்படி இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் ஜோவிகா விஜயகுமார் வெளியேறி உள்ளார் என்கிற தகவல்கள் வெளியான நிலையில், 

 சீக்ரெட் ரூமில் அவர் இருக்கிறார் என ஒரு தகவல் கசிந்தது. இதனால் ரசிகர்கள் கடும் குழப்பத்தில் இருந்தனர்.


 ஆனால், தற்போது ஜோவிகா விஜயகுமார் எந்தவொரு சீக்ரெட் ரூமிலும் இல்லை என்றும் தனது பொட்டி படுக்கையை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பி விட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஜோவிகா தமிழ் சினிமாவின் அடுத்த இளம் ஹீரோயினாக மாறப் போகிறார் என்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் அவர் கமிட் ஆகியிருப்பதாக வனிதா கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement