• Jan 19 2025

வசூலில் அள்ளிக் குவித்து வரும் அனிமல் திரைப்படம்- கண்ணீருடன் பிரபல நடிகர் போட்ட பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


 பிரபல தெலுங்கு பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த 1ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸான திரைப்படம் தான் அனிமல்.இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ரன்பீர் கபூர் நடித்துள்ளதோடு இவருடன் ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் எனப் பலர் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகின்றது.2023 ஆண்டிற்கான "முதல் நாள் வசூல்" சாதனை பட்டியலில் அனிமல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த பாபி தியோலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.இது குறித்து பாபி தியோல் கண் கலங்கி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாவது,


அதில் பாபி தியோல், "ரசிகர்களுக்கு மிக்க நன்றி. இது கடவுளின் கருணை. இந்த திரைப்படத்தில் நான் ஏற்ற கதாபாத்திரத்திற்கும், என் நடிப்பிற்கும் உங்களிடமிருந்து அதிக பாராட்டுகள் கிடைத்துள்ளது. எனக்கு இது கனவு போல் இருக்கிறது" என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

 பாபி தியோலின் சகோதரருமான சன்னி தியோல், "பாபி தியோல் உலகையே உலுக்கி விட்டார்" என பாராட்டியுள்ளார்.மேலும் எதிர் வரும் நாட்களிலும் இப்படம் வசூலில் அள்ளிக் குவிக்கும் என நம்பப்படுகின்றது.



Advertisement

Advertisement