பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பமாகி 85 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் நேற்று எலிமினேஷன் நடைபெற்றது அதில் போட்டியாளர் ஜெப்ரி வெளியேறினார். இந்நிலையில் இன்றைய நாள் ப்ரோமோ வெளியாகி உள்ளது.அதில் யார் வெளியேற போகிறார் என்று பார்ப்போம்.
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி போட்டியாளர்களை பார்த்து "எத்தனை பேர் நாமினேஷனில் இருக்கீங்க?" என்று கேட்கிறார். அதற்கு விஷால், மஞ்சரி, அன்ஷிதா,ஜாக்லின்,பவித்ரா,ராணவ் கை தூக்குகிறார்கள். பின்னர் "யார் எலிமினேட் ஆகுவார் என்று நினைக்கிறீங்க" என்று கேட்கிறார். போட்டியாளர்கள் மாறிமாறி ஒவ்வொருவரையும் கூறுகிறார்கள்.
இந்நிலையில் "விஷால் நான் வெளியேற வாய்ப்பு இருக்கு என்று சொல்கிறார். அன்ஷிதா-ராணவ் வெளியேற வாய்ப்பு இருக்கு என்று சொல்கிறார். ராணவ்-பவித்ராவை சொல்கிறார். பவித்ரா-ராணவை சொல்கிறார். ஜாக்குலினும் ராணவ் என்று சொல்கிறார். மஞ்சரியும் ராணவ் என்று சொல்கிறார். பின்னர் விஜய் சேதுபதி "நீங்க நினைக்கிறத சொல்லிட்டிங்க, ஆனா மக்கள் நினைக்கிறது இது தான்" என்று பெயர் காட்டுகிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. யார் வெளியேறுவார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!