பாலிவுட் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்த நடிகர் தான் பாபி தியோல். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
2021 ஆம் ஆண்டு ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் அனிமல். இந்த படத்தில் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத ஒரு வில்லனாக பாபி தியோல் நடித்திருந்தார். அத்துடன் இந்த படத்தில் அவருக்கு மூன்று திருமணம் நடைபெற்றுள்ளதோடு அதில் இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருந்தன.
d_i_a
அனிமல் படத்தின் மூலம் இந்திய திரை உலகின் சிறந்த வில்லன்களின் பட்டியலில் இடமும் பிடித்தார். அது மட்டும் இல்லாமல் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான ரேஸ் 3 படத்திலும் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து தற்போது இளைய தளபதி விஜய் நடிக்கும் 69 ஆவது படத்தில் வில்லனாக களமிறங்கியுள்ளார். ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்திற்கு பாபி தியோல் வில்லனாக நடிக்கின்றார் என்ற தகவல் அறிந்ததும் ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்த நிலையில், தற்போது பாபி தியோல் குடும்பத்தினரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதன் போது பாபி தியோல் தனது மகனுடனும் மனைவி உடனும் போட்டோகிராபர்க்கு கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் மனைவி செல்லும்போது காரின் கதவை திறந்து விட்டு அவருக்கு பணிவடையும் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Listen News!