தமிழ் திரையுலகில் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவான திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்களிடையே தனி வரவேற்பைப் பெறுகின்றன. அந்த வகையில், நடிகர் முனிஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம், நாளை டிசம்பர் 24 அன்று ஜீ5 (ZEE5) ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

மிடில் கிளாஸ் திரைப்படம், திருமணம் ஆன ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தலைவன் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள், பொறுப்புகள் மற்றும் மன அழுத்தங்களை நகைச்சுவை பாணியில் எடுத்துரைக்கிறது. குடும்பம், வேலை, சமூகம் ஆகியவற்றுக்கு நடுவே சிக்கிக்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை, இந்த படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது.
இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார். முதல் படத்திலேயே, நடுத்தர வர்க்க வாழ்க்கையின் நிஜமான பிரச்சனைகளை எளிமையாகவும், நகைச்சுவை கலந்த முறையிலும் திரையில் கொண்டுவர முயற்சித்துள்ளார். அவரது இயக்க பாணி, குடும்ப ரசிகர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது.

நடிகை விஜயலட்சுமி, இந்த படத்தில் குடும்பப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இத்திரைப்படம் கடந்த நவம்பர் 21 அன்று திரையரங்குகளில் வெளியானது. தற்போது ஓடிடி வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்னும் அதிகமான பார்வையாளர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!