உலகளவில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கான மதிப்பீடுகளில் மிகுந்த நம்பகத்தன்மை பெற்றதாக கருதப்படும் Time இதழ், 2025ம் ஆண்டிற்கான சிறந்த கொரியன் (K-Drama) தொடர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல்,கொரியன் தொடர்களுக்கு உள்ள ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

அந்த பட்டியலில், Netflix-ல் வெளியான ‘When Life Gives You Tangerines’ தொடர் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த தொடர், அதன் உணர்ச்சிபூர்வமான கதை, நுணுக்கமான திரைக்கதை மற்றும் வலுவான நடிப்புகளால் உலகளாவிய ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தது.

Time இதழின் பட்டியலில் 2வது இடத்தை ‘Way Back Love’ தொடர் பிடித்துள்ளது. காதல், நினைவுகள் மற்றும் கடந்த காலத்தின் தாக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான இந்த தொடர், இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘Squid Game’ தொடரின் மூன்றாவது சீசன், Time இதழின் 2025 சிறந்த கொரியன் தொடர்கள் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!