• Jul 13 2025

துல்கர் சல்மானின் "காந்தா" படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின் சிறப்பான நடிகரான துல்கர் சல்மான், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில்  தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். தற்போது அவர் நடித்து வரும் புதிய திரைப்படமான “காந்தா”, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இந்தப் படத்தை 'தி ஹன்ட் பார் வீரப்பன்' வெப் தொடரின் இயக்குநர் செல்வமணி செல்வராஜு இயக்குகியுள்ளார். Netflix-ல் வெளியாகி விமர்சன ரீதியாகவும், பார்வையாளர்களிடையிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற அந்தத் தொடருக்குப் பிறகு, செல்வமணி இயக்கும் முதல் திரைப்படமே “காந்தா”.

“காந்தா” திரைப்படம் வெறும் நட்சத்திரப்படமல்ல. மூன்று பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மற்றொரு ஹைலைட், ராணா டகுபதி இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பல்வேறு பிரபல ஊடகங்கள் இதனை உறுதிப்படுத்தி உள்ளன. அவர் பாகத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


சமூக வலைத்தளங்களில் இந்தப் படத்தின் அப்டேட் வெளியாகியதிலிருந்து, ரசிகர்கள் மகிழ்ச்சியாகியுள்ளனர். துல்கர் சல்மானின் தனித்துவமான நடிப்பு, ராணா டகுபதியின் வித்தியாசமான பங்கு, பாக்யஸ்ரீ போர்ஸின் புது முகம் மற்றும் செல்வமணியின் அனுபவம் இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படம் ஒரு தீவிரமான திரை அனுபவமாக மாறும் என நம்பப்படுகிறது.


Advertisement

Advertisement