• Jan 18 2025

எதிர்நீச்சல் சீரியல் நடிகை போட்ட திடீர் போஸ்ட்... அப்போ இனி சீரியலுக்கு முற்றுப்புள்ளியா? ரசிகர்கள் சலசலப்பு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முக்கியமான நடிகையாக வலம் வந்தவர் தான் கனிகா. இவர் தற்பொழுது சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் என்னும் சீரியலில் ஈஸ்வரி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

திவ்யா என்னும் இயற்பெயரைக் கொண்ட தமிழிப் பெண்ணான இவர், மதுரையில் தான் கல்வி பயின்றிருக்கிறார். தொடர்ந்து ராஜஸ்தானில் மேல்ப் படிப்பை படித்த இவர், அங்கு தான் ஹந்தியும் படித்தாராம்.  இவருக்கு பாடுவது என்றால் ரொம் பிடிக்குமாம் அதே போல நன்றாக சமைக்கவும் தெரிந்தவராம்.அத்தோடு சூப்பராக படிக்கக் கூடியவராம்.


தமிழில் வெளியான ஆட்டோகிராப் ,எதிரி ,வரலாறு போன்ற இன்னும் சில படங்களில் நடித்திருக்கின்றார். இதில் வரலாறு தான் இவருடைய கடைசித் திரைப்படம்.

மேலும் ஷாம் ராதா கிருஷ்ணன் என்பவரை கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்ட அவர், கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  


இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட புகைப்படமொன்று தற்போது வைரலாகியுள்ளது.

அதாவது, தற்போது இலங்கைக்கு சென்றுள்ள கனிகா, அங்கு ஆட்டோ ஓட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'இப்போ என் கைவசம் ஒரு தொழில் இருக்கே, கவலை எதற்கு?' என கேட்டுள்ளார்.

இவ்வாறு நடிகை கனிகா போட்ட ட்வீட்டால், அப்போ இனி சீரியலுக்கு குட் பாய் போல என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement