• Jan 18 2025

ஒரு மிடில் கிளாஸ் பையனோட கனவை அழிச்சது சரியா? பிரதீப் தொடர்பில் விசித்திராவின் கணவன் கொந்தளிப்பு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும்  பிக் பாஸ் சீசன் 7ல்  ரெட் கார்ட் மூலம் வெளியானவர் பிரதீப் ஆவார் .

அவர் வெளியேறியதை ரசிகர்கள் கொஞ்சம் கூட ஏற்று  கொள்ளவில்லை . பிரதீப் திருப்பி வர வேண்டும்  என்று ரசிகர்கள் கொந்தளித்தது சமூக வலைத்தளங்களில் காண கூடியதாக இருந்தது .


இப்போது பிரதீப் பற்றி  விசித்திராவின் கணவர்  கூறுகையில், நான்  சொல்ல போகும் விஷயம் அத்தியாயத்தில் வந்ததோ தெரியவில்லை .விசித்திராவும் பிரதீப்பும் கலந்துரையாடி கொண்டு இருக்கும் போது ஐம்பது லட்சத்த வைச்சி நீ என்னடா செய்ய போறா என்று விசித்திரா கேட்க, நான் வீடு கட்டுவன் சித்திக்கு கொடுப்பன் இப்பிடியெல்லாம்  விசித்திராக்கு பிரதீப் பதில் சொல்ல, விசித்திராவும் பிரதீப்பும் அம்மா மகன் பேசுவது போல பேசிக் கொண்டது, பார்க்கவே அழகா இருந்தது என்று விசித்திராவின் கணவர் கூறியுள்ளார் .

அதேவேளை, ஒரு கஷ்டப்பட்ட மகன் எவ்வளவு கனவுகளோடு பிக் பாஸ் வீட்டுக்கு வந்து இருப்பான். அவனை சம்மந்தமே இல்லாத காரணம் வைச்சி ரெட் கார்ட் காட்டி அனுப்பினது எனக்கு சரியாகவே படவில்லை என கவலையோடு தெரிவித்துள்ளார் .

Advertisement

Advertisement