• Nov 21 2025

கங்குவா வில்லனாக மிரட்டும் பாபி தியோல்! இவர் பற்றி சூர்யா கூறிய அந்த ரகசியம்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது. இந்த திரைப்படம் பார்த்த ரசிகர்கள் பலரும் நல்ல விமர்சனங்கள் கொடுத்து வரும் நிலையில் சூர்யாவிற்கு வில்லனாக கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ள பாபி தியோல் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். 


சமீபத்தில் நடந்த ப்ரோமோஷன் ஒன்றில் சூர்யா நடிகர் பாபி தியோல் தொடர்பாக கூறியுள்ளார். அதாவது எனக்கும் அவருக்கும் எந்தவிதமான  தொடர்ப்பும் இல்லை. நாங்கள் நேரில் இதற்கு முன்னர் பேசியது கூட இல்லை. மெசேஜ் செய்தது இல்லை ஆனால் கங்குவா திரைப்படத்தின் கதையை கேட்டதும் சூர்யா இருக்கிறாரா அப்படி என்றால் படம் சூப்பராக இருக்கும் என நம்பிக்கையுடன் ஓகே சொன்னதாக கூறியிருந்தார். 


d_i_a

அது எனக்கு மிகவும் சந்தோசமா இருந்தது. ரொம்ப ஓபனாக பேசுவாரு, சகஜமாக பலகுவாறு. அவரு ஒரு தடவை என்கிட்ட ஒரு விஷயம் சொன்னாரு அவருக்கு ஒரு சரிவு ஏற்றப்பட்டது. அதுனால ஒரு நிகழ்ச்சிக்கு  போனா கூட இவரை ஏன் கூப்பிட்டிங்கனு கேப்பாங்க அப்டி ஒரு காலம் இருந்தது. ஆனா அவருடைய குடும்பம், உறவினர்கள் ,நண்பர்கள் சப்போட் செய்திருக்காங்க. இப்ப இவரு இப்படி ஒரு நடிகராக வாரத்துக்கு என்று சூர்யா கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement