• Jan 19 2025

அஜித்தை நலம் விசாரிக்க செல்லும் விஜய்..! சற்றுமுன் தகவல் வழங்கிய பிரபலம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் அஜித், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை நடைபெறுவது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டே இருக்கின்றன.

முதலில் அஜித்துக்கு மூளையில் பிரச்சனை அதனால் நான்கு மணி நேரம் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அறுவை சிகிச்சைக்கு பின் அவர் நலமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.  


ஆனால் அஜித் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல இருக்கும் நிலையில், அவரின் உடல் பரிசோதனை நடந்ததுதான் உண்மை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு தற்போது தகவல் ஒன்றை வழங்கி உள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,


விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பட குழுவில் உள்ளவர்களுக்கு சிறு சிறு பிரச்சனைகள் இருந்தது.

அஜித்துக்கு டூப் போட வந்த நபருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட அவர்கள் திரும்பவும் இந்தியா வந்ததாக செய்யாறு பாலு கூறினார்.

ஆனால் அஜர்பைஜான் போனதுதான் அஜித் செய்த தவறு என்று கூறிய செய்யாறு பாலு, தற்போது அஜித்தை பார்க்க விஜய் மருத்துவமனைக்கு வர இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement