• May 08 2026

கர்ப்பமாக இருக்கும் தங்கமயிலின் விரக்தி முடிவு… பேரதிர்ச்சியில் மீனா.!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோட்டில், இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று நம்பி, மீனா கோவிலின் வெளியே காத்திருக்கின்றார். ஆனால், சரவணன் தங்கமயிலிடம் சண்டை போட்டு வெளியே வந்து மீனாவிடம், “இதற்கெல்லாம் நீதான் காரணமா? உனக்கும் செந்திலுக்கும் சண்டை என பயந்துதான் வந்தேன். ஆனால் இனி இப்படி பண்ணாதே” என்று கூறிவிட்டு செல்கிறார்.

அதன் பின், தங்கமயில் மீனாவை கட்டிப்பிடித்து அழுகின்றார். “சரவணன் மாமா என்னை நம்பவே இல்லை. அது கூட பரவாயில்லை, என்னை சந்தேகப்பட்டு ‘இது எவனோட குழந்தை?’ என்று கேட்டார்” என கதறி அழுகின்றார்.

இதைத் தொடர்ந்து இருவரும் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு பாக்கியம் மற்றும் அவருடைய கணவர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், தங்கமயில் வீட்டிற்கு வந்ததும் நேரே  ரூமுக்கு சென்று விடுகின்றார். இதை பார்த்த அவரது அம்மா, அப்பா இருவரும், தங்கமயில் மாமியார் வீட்டிற்கு போவதற்காக துணிகளை பேக் பண்ணுகின்றார் என யோசிக்கின்றனர்.


ஆனால், தங்கமயில் தான் ஒரு முடிவு எடுத்திருப்பதாக மீனாவிடம் கூறுகின்றார். அதன்படி, “இனி எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் இனி அவரை தொந்தரவு செய்ய மாட்டேன். நிரந்தரமாக பிரியப் போகிறேன்” என்று சொல்லுகின்றார். இதைக் கேட்டு மீனா அதிர்ச்சி அடைகின்றார்.

எனினும், “இந்த விஷயத்தை வீட்டில் சொல்லலாம். அவசரப்பட்டு இந்த முடிவை எடுக்க வேண்டாம்” என்று மீனா கூறுகின்றார். ஆனால், தங்கமயில் வேண்டாம் என்று சொல்லி இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என மீனாவிடம் சத்யம் வாங்குகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement