• Apr 15 2026

மீனா விஷயத்தில் சந்தேகத்தை கிளப்பிய ஸ்ருதி… அதிரடியாக என்ட்ரி கொடுத்த ரோகிணி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோடில், முத்து வீட்டிற்கு வந்ததும் மீனா எங்கே? என அண்ணாமலை விசாரிக்கின்றார். ஆனால், அவர் வரவில்லை என்று சொன்னதும் விஜயா சந்தோஷப்படுகின்றார்.

அதற்குப் பின்பு முத்து, ரவி மற்றும் மனோஜ் ஆகியோர் தூக்கம் வராமல் தவிக்கின்றனர். அதேபோல், மீனா, ரோகிணி மற்றும் ஸ்ருதியும் தங்களுடைய கணவர்களை நினைத்து வருந்துகின்றனர்.

எனினும், அண்ணாமலை பொய் சொல்லி நாடகமாடி ஏமாற்றிய ரோகிணியை தலையில் தூக்கி வைத்த விஜயா, வீட்டிற்கு நல்லது நினைத்த மீனாவை மட்டும் வெளியே துரத்தி விட்டு நிம்மதியாக தூங்குகின்றார் என்று  கவலைப்படுகின்றார்.


அதற்குப் பின்பு மீனாவை சென்று சந்தித்த ஸ்ருதி, “இது எல்லாம் ரோகிணியின் பிளானாக கூட இருக்கலாம். நீங்க வீட்டை விட்டு போகணும் என்று அவங்க நினைத்திருக்கலாம்” என்று சந்தேகத்தை தூண்டிவிடுகின்றார்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே, ரோகிணி அங்கு காரில் வந்து என்ட்ரி கொடுக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement