• May 08 2026

பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் பட்டையை கிளப்பும் ‘தாய்க்கிழவி’… 6வது நாள் மொத்த வசூல்.?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80, 90 ஆம் ஆண்டுகளில் ஹீரோயினாக கலக்கிய ராதிகா தற்போது குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்த ‘தாய்க்கிழவி’ படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது. ‘தாய்க்கிழவி’ படத்தில் ராதிகாவின் தோற்றம், பாடி லாங்குவேஜ் என முற்றிலும் மாறி, ஒட்டுமொத்த திரைத்துறையினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

படம் ரிலீஸ் ஆகும் முன்பே சிறப்பு திரையிடப்பட்டு, பிரபலங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் காண்பிக்கப்பட்டது. இதனை பிரீமியர் ஷோவில் பார்த்தவர்கள், இந்த படம் ராதிகாவுக்கும் தமிழ் சினிமாவுக்கும் முக்கியமான படமாக அமையும் என தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.


அதன்படியே இந்த படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் ராதிகாவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், ராதிகாவுக்கு இந்த படத்திற்காக தேசிய விருது கொடுக்க வேண்டும் என்ற அளவுக்கு பாராட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘தாய்க்கிழவி’ படத்தின் ஆறாவது நாளுக்கான வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் இதுவரை 21.45 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 10 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், இந்த படம் இரண்டு மடங்கு லாபத்தை சம்பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement