• Jan 19 2025

சத்யாவுக்கு சரியான செருப்படி கொடுத்த முத்து! ரொமான்ஸில் பின்னிய மீனா!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், மீனாவின் திருமண நாள் கொண்டாட்டத்திற்கு சத்யா புது துணி, மாலை என வாங்கி வந்து வாசலில் நிற்க, எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றார்கள். முத்துவுக்கு கோவம் வர, மீனா முத்துவின் கையைப் பிடித்து சமாளிக்கிறார்.

அதன் பிறகு அண்ணாமலை சத்யாவை பார்த்து காலேஜுக்கு போயிருக்க என்று சொன்னாங்க எனக் கேட்க, காலேஜுக்கு தான் போனேன். ஆனா இன்னைக்கு அக்கா மாமாவுக்கு கல்யாண நாள் அதனால நானே சம்பாதித்த பணத்தில் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து இருக்கன் என்று சொல்லுகிறார்.

அதன் பிறகு என்னுடைய காசுல நான் உங்களுக்காக பார்த்து பார்த்து வாங்கின சட்டை உங்களுக்கு பிடிச்ச கலர்ல வாங்கி இருக்கேன் என்று புது துணிகளை நீட்ட அதை வாங்கி பார்த்து  சட்டை எடுத்துப் போட்டுக் கொள்கிறார் முத்து. மேலும் என் மச்சான் வாங்கி கொடுத்த சட்டையை போடாமல் இருக்க முடியுமா? எனக்கு கரெக்டா இருக்கு என சிரித்துக் கொண்டு இருக்க, சத்யாவின் முகம் மாறுகிறது. பிரச்சனையை நடக்கும் என்று எதிர்பார்த்து சத்யா ஏமாற்றம் அடைகிறார்.

மேலும் உங்க யாருக்காவது மாலை வாங்கணும்னு தோணுச்சா? என் மச்சான் வாங்கிட்டு வந்திருக்கான் என்று மீனாவுக்கு மாலையை போட்டுவிட்டது மட்டுமில்லாமல் தானும் மாலையை போட்டுக் கொள்கிறார். சத்யாவுக்கு கேக்கும் ஊட்டி விடுகிறார் முத்து.


இதை தொடர்ந்து மீனாவின் குடும்பத்தார் வீட்டுக்கு கிளம்ப முத்து சத்யாவிடம், நீ இதெல்லாம் உன் அக்கா மேல இருக்கிற பாசத்துல வாங்கிட்டு வரல, என்ன வெறுப்பேத்தி பிரச்னை பண்ணனும்  என்று தான் வாங்கிட்டு வந்தா என்று எனக்கு நல்லா தெரியும். உன்ன பாத்ததும் செவில்ல நாலு போடணும் போல தான் தோணுச்சு. அப்படி பண்ணினா உன் அக்கா கஷ்டப்படுவா. என் பொண்டாட்டி கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியாது. இன்னொருமுறை என்ன வெறுப்பேத்த இந்த மாதிரி ஏதாவது பண்ணினா உன் கைய மட்டும் இல்ல காலையும் உடைத்து விடுவேன் போடா என அனுப்பி வைக்கிறார் முத்து.

அதற்குப் பிறகு கிச்சனில் ரோகிணி இருக்க, அங்கு வந்து விஜயா எல்லாரும் ஃபேமிலியா ஒன்றாக இருந்தாங்க. மீனா வீட்ல இருந்து அவங்க அம்மா வந்தாங்க, ஸ்ருதி வீட்டில் இருந்து அவங்க அம்மா வந்தாங்க, ஆனா உங்க வீட்ல இருந்து யாரும் வரல. உனக்கு அம்மா இருந்தா வந்து இருப்பாங்க, பாவம் அவங்க நோய்வாய்ப்பட்டு போயிட்டாங்களே என பேச ரோகிணி கலங்கி போகிறார். விஜயா போனதும் அம்மாவிற்கு ஃபோன் போட்டு நலம் விசாரித்து இந்த வாரம் வந்து உன்னையும்  கிரிஷ்சையும் பார்த்துட்டு போறேன் என சொல்லுகிறார்.

இதை அடுத்து முத்துவும் மீனாவும் மொட்டை மாடிக்கு தூங்க கிளம்ப, அண்ணாமலை இன்னைக்கு எங்க ரூம்ல படுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல, விஜயா இங்க அணலா இருக்கும் என்று சொல்கிறார். அதற்கு முத்து, நாங்க மேலையே தூங்குறோம். நீ ரூம்ல தூங்கு உனக்கு டஸ்ட் ஒத்துக்காது என்று சொல்லி கிளம்புகிறார்.

பிறகு பாட்டி நீங்க மட்டும் தான் மேல தூங்கணுமா என்று கேட்க, வேற என்ன அத்தை பண்றது என்று சொன்ன விஜயா, ரோகினி வேலைக்கு போறா. ஸ்ருதியும் கை நிறைய சம்பாதிக்கிறார். அவங்க நல்லா தூங்கணும் இல்ல. ரூம்ல தான் ஏசி இருக்கு என்று சொல்லுகிறார். அதற்கு பாட்டி, முத்துவும் தான் நாளேல்லாம் கார் ஓட்டுகிறார். மீனா பூ கட்டுகிறா என்று பேச, நல்ல மனசு இருந்தா எங்க படுத்தாலும் தூக்கம் வரும். மொட்டை மாடியில் எனக்கு நல்லா தூக்கம் வருது என்று முத்து சொல்ல, மீனாவும் ஆமாம் பாட்டி நானும் படுத்ததும் தூங்கிடுவேன் என்று மொட்டை மாடிக்கு செல்கின்றார்கள்.

அதன்பிறகு கிச்சனில் மீனா தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த ஸ்ருதி டென்ட்டை மீனாவிடம் கொடுக்க, இது எதுக்கு எனக் கேட்கிறார் மீனா. அதற்கு ஸ்ருதி, கிராமத்துல  உங்களுக்கு குடை தேவைப்பட்டது. அந்த மாதிரி இங்கேயும் டென்ட்டை தேவைப்படும் என்று சொல்லி கொடுத்து  அனுப்புகிறார். மீனாவும் வெட்கப்பட்டு கொண்டே கொண்டு போக முத்து என்ன மறைத்து கொண்டுவார? கல்யாண நாள் என்பதால் பால் சொம்பு கொடுத்து அனுப்பினார்களா என்று கேட்க,, அவர் டென்ட்டை தூக்கி போடுகிறார். இதனால் முத்து டென்ட்டை  ரெடி பண்ணி இருவரும் பாட்டு பாடி ரொமான்டிக்காக திருமண நாளை கொண்டாடுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து அண்ணாமலை ரூமுக்கு வந்த பாட்டி ரூம் பிரச்சினை பற்றி பேச, நானே மொட்டை மாடியில் ஒரு ரூம் கட்டலாம்னு இருந்தன் என்று அண்ணாமலை சொல்கிறார். அதற்கு விஜயா ஸ்ருதியோட அம்மாவும் கட்டித்தாரேன் என்று சொன்னாங்க என்று பேச, அவர்கள் சொன்னது நல்ல விஷயம் ஆனா சொன்ன விதம் எப்படி இருந்தது?  நம்ம வீட்ல எதுக்கு அவங்க கட்டிக் கொடுக்கணும் என்று கோபப்படுகிறார். பாட்டியும் விஜயாவை பேசுகிறார்.  இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement