• Jan 19 2025

திரைவி படத்தின் புது அப்டேட் வெளியாகும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்.

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

கார்த்தி தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் ‘திரைவி’. முனிஷ் காந்த் , அசோக், ஆஷ்னா சவேரி, நிழல்கள் ரவி, சரவண சுப்பையா, ராட்சசன் சரவணன்,  வினோத் சாகர் என படத்தில் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.இத்  திரைப்படம்  பி.ராஜசேகரன் மற்றும் முருகானந்தம் ஆகியோரின் இணை தயாரிப்பில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆர்.அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு என்.டி.ஆர் இசையமைத்திருக்கிறார். அருண்பாரதி, வெ.மதன்குமார் பாடல்கள் எழுத, ஆர்.வசந்தகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார். எஸ்.எல்.பாலாஜி நடனக் காட்சிகளை வடிவமைக்க, தயாரிப்பு மேற்பார்வையாளராக எஸ்.எம்.ராஜ்குமார் பணியாற்றியிருக்கிறார். 

 

உலகில் நல்லவர்களும் யாரும் கிடையாது, கெட்டவர்களும் யாரும் கிடையாது, சூழ்நிலை தான் அவரவரை அடையாளப்படுத்துகிறது, எனும் ஒன்லைனர் உடன்  உருவாகியிருக்கும் இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. இதனை பிரபல இயக்குநர் சசி வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement