• Jan 18 2025

இன்று வெளியாகிறது ஹிப் ஹாப் தமிழாவின் அடுத்த அப்டேட் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழில் பெரும் ரசிகர் படையை கொண்ட சொல்லிசை குழுவான ஹிப் ஹாப் தமிழா முதன் முதலில் 2011 இல் வெளியான "கிளப் லே மப்பு லே" பாடலுடன் பிரபலமாக தொடங்கி இந்தியாவின் முதல் தமிழ் ஹிப் ஹாப் ஆல்பமான "ஹிப் ஹாப் தமிழன்" வெளியிடும் வரையான ஒரு வெற்றி பயணத்தை தனதாக்கியது.

Hiphop Tamizha - Apps on Google Play

எங்கும் ஒலித்த இவர்களது பாடல் இவர்களுக்கான திரை வாய்ப்பை "ஆம்பள" படத்தின் மூலமாக இசையமைப்பாளராக உருவெடுத்த ஆதி அடுத்தடுத்து ஹிட் பாடல்களை தன் குரலிலேயே கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் அங்கீகாரத்தை பெற்றார்.

Hiphop Tamizha : r/kollywood

பாடலாசிரியர்,பாடகர்,இசையமைப்பாளர் என தன்னை வளர்த்துக்கொண்டிருந்த ஹிப் ஹாப் ஆதி இயக்குனர் நடிகர் என களம் கண்டார் "மீசைய முறுக்கு" திரைப்படத்தின் மூலம்.கைவைத்த இடமெல்லாம் வெற்றி அடுத்தடுத்து ஹீரோவாக பல படங்களில் பணியாற்றிய ஆதி தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உருவெடுத்தார்.

Hiphop Tamizha Adhi's superhero movie ...

இந்நிலையில் இன்று  ஹிப் ஹாப் தமிழாவின் உத்தியோகபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியாகியிருக்கும் அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாய் அமைந்திருக்கிறது.ஹிப் ஹாப் தமிழா ஆதியின்  தயாரிப்பு மற்றும் இயக்கம் நடிப்பில்  அடுத்த வெளியீடாக வரவிருக்கும் படத்தின்  உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Advertisement

Advertisement