• Jan 18 2025

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவுக்கு டப்பிங் பேசுவது வடிவுக்கரசியா? வெளியான தகவல்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டு சீரியல்களில் தற்போது பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசைசீரியல். இந்த சீரியலுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுள் முதன்மை வாய்ந்த சீரியலாக தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் காணப்படுகிறது. இந்த சீரியல் ஏனைய சீரியல்களைப் போல் அல்லாமல் கொஞ்சம் விறுவிறுப்பாக செல்வதாலும், இதில் இளம் ஜோடிகள் அதிகளவான ரசிகர்களை கவர்ந்ததினாலும் இந்த சீரியல் குறுகிய காலத்திற்குள் ரொம்பவும் ஃபேமஸ் ஆனது.

அதிலும் இந்த சீரியலில் வில்லி கேரக்டரில் நடிக்கும் விஜயா, ரோகினி ஆகியோருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொல்லலாம். இவர்கள் நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் இவர்களை வைத்து கதை நகர்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.


இந்த நிலையில் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் விஜயா கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்த டப்பிங் ஆர்டிஸ்ட் கல்யாணி பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ஆரம்பத்தில் விகடன் என்னை இந்த சீரியலுக்கு டப்பிங் கொடுக்க சொல்லி அழைத்த போது நான் முதலில் தயங்கினேன். எனது குரல் சரி வருமா என்ற தயக்கம் என்னுள் காணப்பட்டது.

காரணம் எனது குரல் வடிவுக்கரசியின் குரலை ஒத்து இருப்பது தான். இந்த சீரியலில் விஜயா கேரக்டருக்கு ஆரம்பத்தில் குரல் கொடுக்கும் போது சற்று தயக்கத்துடன் கொடுப்பேன் ஆனால் போகப் போக சரியாக விட்டது.

சமீபத்தில் நான் ரயிலில் வரும் போது அங்கு இருந்த பெண்கள் பலர் சிறகடிக்க ஆசை சீரியலை தான் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். அப்போது எனது வாய்ஸ் கேட்க மிகவும் பெருமையாக இருந்தது. இந்த சீரியல் இவ்வளவு ஃபேமஸ் ஆகும் என்று நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement