• Aug 31 2024

ஆல்யா மானசா வீட்டில் என்ன விசேஷம் தெரியுமா? சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் நடித்து பேமஸ் ஆனவர்கள் தான் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி. இவர்கள் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே காதலில் விழுந்தார்கள். அதன் பின்பு திருமணம் செய்து கொண்டார்கள்.

தற்போது ஆல்யா மானசா சஞ்சீவ் ஜோடிக்கு மகன் ஒருவரும் மகள் ஒருவரும் உள்ளார்கள். சமீபத்தில் தான் இவர்கள் புது வீடு கட்டி அதில் குடி புகுந்த வீடியோக்களையும் தமது ரசிகர்களுக்கு காட்டி மகிழ்ந்திருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது ஆல்யா மானசா தனது பெற்றோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிக்காட்டி உள்ளார்.


அதாவது ஆல்யா மானசா காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சஞ்சீவ் வீட்டார்கள் இதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தற்போது வரையில் ஆல்யா மானசாவின் குடும்பத்தினர் அவர் மீது கோபத்தில் உள்ளதாகவும் பேட்டிகளில் கூறியிருந்தார்.


இவ்வாறான நிலையிலேயே தற்போது ஆல்யா மானசாவின் பெற்றோர் பழசை எல்லாம் மறந்து மீண்டும் தமது பிள்ளை பேரப்பிள்ளைகளுடன் இணைந்துள்ளார்கள். ஆல்யா மானசாவின் பெற்றோரை வீட்டிற்கு கூட்டி வந்து சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸில் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார் ஆல்யா.


Advertisement

Advertisement