• Jan 16 2026

சிக்கந்தர் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் கைகோர்க்கும் அடுத்த பிரபலம் !

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சல்மான் கான், சஜித் நதியத்வாலா நடித்து வரும் திரைப்படமான சிக்கந்தரில் கதாநாயகியாக நடிக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.சாஜித் நதியாத்வாலா இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிடவிருக்கும் இப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தவாறுள்ளன.


படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பிஸியாக நடந்து வரும் நிலையில் சிக்கந்தர் படத்தில் இன்னொரு பிரபலம் இணைவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.தற்போது சிக்கந்தர் படத்தில் சமூக ஊடகங்கள் அனைத்திலும் ட்ரென்ட் ஆகியிருக்கும் நடிகர் ஃபஹத் பாசிலே இணைவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


வருகிற 2025 ஆம் வருடம் ஈத் பண்டிகைக்கு வெளியாக உள்ள இத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்நிலையில் ஃபஹத் பாசிலின் என்ட்ரி படத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் என சினிமா வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement