• Jan 19 2025

இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்களில் ஒன்று காலா ! சொன்னது யார் தெரியுமா ?

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

ஐக்கிய இராச்சியம் லண்டனை மையமாக கொண்டு வெளிவரும் மாதாந்த திரைப்படம் சார் இதழான சைட் அண்ட் சவுண்ட்  ஆனது பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மூலம் வெளியிடப்படுகிறது.இந்த மாதத்திற்கான சைட் அண்ட் சவுண்ட் இதழில் வெளியான தகவல் தமிழ் திரையுலகிற்கு ஒரு பெருமையை கொடுத்தது.


சைட் அண்ட் சவுண்ட் இதழின் இந்த மாதத்திற்கான பதிப்பில் வெளியான  இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்களின் பட்டியியலில் கடந்த 2018 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிப்பில் வெளியான காலா படம் இடம்பெற்றிருக்கிறது.

It's Kaala time at last! | It's Kaala ...

இப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஒரு இந்திய திரைப்படமான காலா இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்தது எனலாம்.மேலும் ஓல்ட் பாய் ,ஹிஸ்ரறி ஆஃப்  வைலன்ஸ் போன்ற படங்கள் இடம்பெற்றிருக்கும் இப் பட்டியலில் தமிழ் படம் ஒன்றின் இருப்பு தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.


Advertisement

Advertisement