• Jan 19 2025

வேட்டையனை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்.. என்ன இப்படி எல்லாம் கேள்வி கேக்கிறாரே..!!

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படம் தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக ரிலீஸ் ஆக உள்ளது.

வேட்டையன் படத்தின் மூலம் தமிழில் முதல்முறையாக அமிதாப்பச்சன் என்ட்ரி ஆகின்றார். இந்த படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஏ.ஐ தொழிநுட்பத்தை மூலம் டப்பிங் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது பிரகாஷ்ராஜின்  வாய்ஸை பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் இன்னும் இரண்டு கிழமைகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் காரணத்தினால் இப்போது இருந்தே ரசிகர்கள் என்ஜாய் செய்து வருகின்றார்கள். மேலும் படத்தின் ரிலீஸை திருவிழாவாக கொண்டாடாகவும் தயாராகி உள்ளார்கள்.

சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்தில் விஜய்யை இளமையாக காட்ட  ஏ.ஐ தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்த படத்தில் நிறைய டெக்னாலஜிகள் உட்பகுத்தப்பட்டன. ஆனாலும் சில இடங்களில் ரசிகர்களின் வெறுப்பை தான் சம்பாதித்து இருந்தது. இதன் காரணமாகவே ஏ.ஐ   தொழில்நுட்பத்தின் மேல் ஒரு சலிப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.


இந்த நிலையில், வேட்டையன் படத்தில் அமிதா பச்சனுக்கு நடிகர் பிரகாஷ்ராஜின் குரல் கொடுத்துள்ளதாகவும், அவரது குரலை ஏ ஐ மூலம் அமிதாபச்சனின் வாய்ஸ் ஆக மாற்றி உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டது. தற்போது இதனை வழமைபோல ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து கேள்வி எழுப்பி உள்ளார்.

அதாவது இந்த தகவலை இது எப்படி இருக்கப் போகின்றதோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். வழமையாகவே முன்னணி நடிகர்கள் என்றும் பாராமல் பலரை கலாய்த்து தள்ளுவதில் ப்ளூ சட்டை மாறன் முன்னிலை வகித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன்  திரைப்படம் அமிதாப்பச்சனுக்கு ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் வாய்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலை தற்போது கலாய்த்து தலையுள்ளார்.


Advertisement

Advertisement