• Jan 19 2025

கொஞ்சம் பாத்து ஆடுங்க சாயிஷா.. எங்களுக்கே மூச்சு வாங்குது! படுவைரலான வீடியோ

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான வனமகன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை சாயிஷா. அதன் பின்பு ஒரு சில  படங்களிலும் இவருடைய நடன அசைவுகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கஜினிகாந்த் படத்தில் நடிகை சாயிஷா ஆர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். அதன் பின்பு இருவருக்கும் இடையிலான நட்பு காதலாக மாறியது. இவர்களுடைய காதல் குறித்து கிசுகிசுக்கு எழுந்தபோதும் இவர்கள் வாய் திறக்கவில்லை. 

சாயிஷாவின் வீட்டில் முதலில் ஆர்யாவை திருமணம் செய்ய சம்மதம் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அதன் பின்பு ஒரு வழியாக இரண்டு தரப்பும் சம்மதம் தெரிவித்த பின் இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.


திருமணத்துக்கு பின்பு சாயிஷா ஆர்யாவுடன் இணைந்து டெடி என்ற படத்தில் நடித்தார். அதன் பின்பு இருவரும் ஒரேடியாகவே திரையுலகை விட்டு விலகி இருந்தார்கள். படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சாயிஷா சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பார்.

இந்த நிலையில், தற்போது நடிகை சாயிஷா ஆடிய டான்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் படு வைரலாக காணப்படுகின்றது. இதனை பலரும் பார்த்து வியந்து வருகின்றார்கள்..

அதற்கு காரணம் திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயான சாயிஷா எப்படி இப்படி எல்லாம் இடுப்பை வளைத்து நடனம் ஆடுகின்றார்  என்ற ஆச்சர்யம் தான். இதோ அந்த வீடியோ,

Advertisement

Advertisement