• Dec 19 2025

கோபி பற்றி ராதிகாவுக்கு தெரிய வந்த முக்கிய உண்மை- செம சந்தோஷத்தில் இருக்கும் பாக்கியா- செல்வி கொடுத்த ஐடியா- Baakiyalakshmi Serial

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாங்க் ஆபிசர்ஸ் வந்து கோபி ஆறு மாதமாக கிரடிட் பணம் கட்டவில்லை என்று சொல்ல ராதிகா அதிர்ச்சியடைகின்றார்.அப்போது ஈஸ்வரி கோபி கட்ட மறந்திருப்பான் கட்டாயம் கொண்டு வந்து கட்டுவான் என்று சொல்ல, இதைக் கேட்ட ராதிகா என்ன சமாளிக்கிறீங்களா என்று சொல்லி விட்டு கோபமாக உள்ளே செல்கின்றார்.


தொடர்ந்து ஈஸ்வரி,கோபிக்கு போன் பண்ணி வரச் சொல்கின்றார்.அப்போது கோபி வர ஈஸ்வரி ராதிகாவுக்கு கிரடிட் பணம் காட்டாத விஷயம் தெரிந்து விட்டது என்று சொல்ல கோபி ராதிகாவிடம் சென்று பேசுகின்றார். அதற்கு ராதிகாவும் சீக்கிரமாக பணத்தை கட்டிடுங்க என்று அட்வைஸ்ட் பண்ணுகின்றார்.

தொடர்ந்து ஈஸ்வரி தன்னுடைய நகைகளைக் கொண்டு வந்து கொடுக்க ராதிகாவும் செக் எழுதிக் கொண்டு வந்து கொடுக்கின்றார். ஆனால் கோபி இருவரிடமும் எதுவும் வாங்காமல் தானே கிரடிட் காட் பணத்தை கட்டி விடுவதாக சொல்வி விடுகின்றார்.பின்னர் வீட்டில் எல்லோரும் இருக்கும் போது பாக்கியாவும் செல்வியும் வருகின்றனர்.


அங்கு வரும் செல்வி கண்காட்சியில் தங்களுடைய கான்டீனுக்கு நிறைய பேர் வந்த விஷயத்தையும் பாக்கியாவைப் பற்றியும் புகழ்கின்றார். பாக்கியா கார் வாங்கலாம், என்று சொல்ல வீட்டில இருக்கிறவங்களும் அதற்கு சம்மதிக்க பாக்கியாவும் வாங்கிக்கலாம் என்கின்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த கோபி கோபத்தில் இருக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement