• Dec 22 2024

விடாமுயற்சியில் இறுதி நேரத்தில் இணைந்த டிவி பிரபலம்.. யார் அந்த நடிகை தெரியுமா?

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவுக்கு வரவுள்ளன.

இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தில் இறுதி நேரத்தில்  தொலைக்காட்சி பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தற்போது அதிகார்வ பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கின்றார். இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதனால்  விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப பணிகள் என்பன விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

d_i_a

இவ்வாறான நிலையில் விடாமுயற்சி படத்தில் தொலைக்காட்சி பிரபலமான ரம்யா சுப்ரமணியன் இணைந்துள்ளதாக அதிகார்வ பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அவர் அஜித் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையும் தருவாயில், ரம்யா இணைந்துள்ளதை தொடர்ந்து அவர் என்ன கேரக்டரில் நடித்திருப்பார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

மேலும் இந்த படத்தின் பாடல் படப்பிடிப்புகள் தாய்லாந்தில் நடைபெற்று வருவதாகவும் இன்னும் சில நாட்களில் இந்த பாடலின் படப்பிடிப்புகள் மொத்தமாக நிறைவுக்கு வருமெனவும் தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement