• May 19 2024

தி கேரளா ஸ்டோரி இன்று முதல் திரையிடப்படாது...அதிர வைத்த காரணம்...நடந்தது என்ன..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கியுள்ள திரைப்படம் தி கேரளா ஸ்டோரி.அத்தோடு இந்தப் படம் கடும் சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.கேரளாவைச் சேர்ந்த 32000 பெண்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவதற்காக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுவதாக இந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தமிழ்நாட்டில் அதிக எதிர்ப்பு இருந்ததால் இன்று முதல் திரையிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியில் உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. அம்ருத்லால் ஷா தயாரித்துள்ள இந்தப் படத்தை சுதிப்தோ சென் இயக்கியுள்ளார். அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

மேலும்  தி கேரளா ஸ்டோரி டீசர் வெளியான போதே இந்தப் படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், இந்த படத்தை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது. அதேபோல் கேரள உயர்நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என விளக்கமளித்தது.

முக்கியமாக தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிடக் கூடாது என அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் போராட்டம் நடத்தின. ஆனால், தமிழ்நாடு, கேரளா உட்பட பல மாநிலங்களில் போலீஸ் பாதுகாப்புடன் தி கேரளா ஸ்டோரி வெளியானது குறிப்பிடத்தக்கது. சென்னையில் வி.ஆர் மால், விருகம்பாக்கம் ஐநாக்ஸ், வேளச்சேரி பி.வி.ஆர், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, சத்யம் தியேட்டர்ஸ் 15 இடங்களில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது.

இதனையடுத்து அப்பகுதிகளில் 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், வி.ஆர் மால், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, சத்யம் தியேட்டர்ஸ் உட்பட 6 திரையரங்குகளை இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கு வரவேற்பு இல்லாத காரணங்களால், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று முதல் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளன.

எனினும் முன்னதாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடியிருந்தார். நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகள், மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த 'லவ் ஜிகாத்' பிரச்னையை, தி கேரளா ஸ்டோரி படத்தில் எழுப்புவதன் மூலம் மாநிலத்தை மத தீவிரவாதத்தின் மையமாக சித்தரிக்க சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக 'தி கேரளா ஸ்டோரி' பட தயாரிப்பாளர்களை கடுமையாக சாடினார்.

கேரளாவைச் சேர்ந்த 32000 பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும், அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் இந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பெண்கள் தீவிரவாதிகளின் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இது அமைதியாக வாழும் மக்களிடம் மத வெறுப்பை ஏற்படுத்துகிறது என பலரும் விமர்சித்துள்ளனர்.

Advertisement

Advertisement