• Jan 18 2025

80 சதவீத லாபத்தை லைகாவுக்கு பெற்றுக் கொடுத்த வேட்டையன்? யாரும் அறியாத உண்மை

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10-ம் தேதி உலக அளவில் ரிலீஸ் ஆனது. இந்த படம் தற்போது வரையில் 350 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இது தொடர்பில் அதிகார்வபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

வேட்டையன் திரைப்படம் ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி திரையரங்குகளில் ரிலீசானது. ஆனாலும் இதைத் தொடர்ந்து பெய்த கன மழையால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. எனினும் திரையரங்குகளில் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து வருகின்றார்களாம்.

இந்த நிலையில், வேட்டையன் படத்தை பற்றி பிரபல பத்திரிகை விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், ஜெய்பீம் என்ற சமூக கருத்துள்ள படத்தை இயக்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் தான் ஞானவேல். அதேபோன்றதொரு கதையை ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்த்தனர். ஆனால் ஜெய் பீம் படம் உருவான விதம் வேறு வேட்டையன் படத்தின் கதைக்களம் வேறு என பயில்வான் தற்போது விளக்கியுள்ளார்.


அதன்படி வேட்டையன் படத்தை ஜெய் பீம் படத்தை வைத்து விமர்சிப்பது தவறு. அது தப்பு. வேட்டையன் படத்தில் பல சமாச்சாரங்களை ஞானவேல் செய்துள்ளார். இந்த படத்தில் அதிகமான வன்முறை காட்சிகள் வைக்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் என்கவுண்டருக்கு காரணம் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த காட்சிகள் சேர்க்கப்பட்டது.

கல்வியும் மருத்துவமும் வியாபாரமானதை இந்த படத்தின் கதைக்களமாக ஞானவேல் எடுத்துக்காட்டியுள்ளார். இந்த படம் ரஜினி படமாகவும் அதே நேரத்தில் ஞானவேலின் படமாகவும் சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் லைக்கா நிறுவனத்திற்கு 80 சதவீதத்திற்கும் மேலான லாபத்தை வேட்டையன் பெற்றுக் கொடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement