• Mar 12 2025

OTT தளத்தில் மோசமான ரெஸ்பான்ஸ் பெற்ற "தண்டேல்"...! சோகத்தில் படக்குழு!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் சாய் பல்லவி தற்போது இந்திய திரை உலகின் முக்கிய நடிகையாக வளர்ந்திருக்கிறார். மலையாள சினிமா மூலம் திரைபயணத்தை தொடங்கிய அவர், தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக விளங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் பல கோடி வசூல் செய்திருந்தது. இதன் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான ‘தண்டேல்’ திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


எனினும் தியேட்டரில் வெற்றி கண்ட இப்படம் OTT தளத்தில் அதே வரவேற்பை பெறவில்லை என்பது படக்குழுவிற்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் தீவிரமான திரைக்கதை, உணர்ச்சி மிகுந்த நடிப்பு எனப் பல காரணங்களால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சில ரசிகர்கள், OTTயில் படம் பார்க்கும்போது கதை மிகவும் மெதுவாக போகின்றது எனக் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதனாலேயே OTTயில் இப்படத்தின் வரவேற்புக் குறைந்துள்ளது. இதனால் படக்குழு சிறிதளவு வருத்தம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement