• Mar 12 2025

ரஜினியின் ‘கூலி’ 1000 கோடி வசூலைத் தாண்டுமா..? வலைப்பேச்சு அந்தணன் அதிரடிக் கருத்து!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘கூலி’ திரைப்படம், தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இந்த படத்திற்காக ரசிகர்கள் மட்டுமல்லாது திரை ஆர்வலர்களும் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.

சமீபத்தில், நடுவர் அந்தணன் பேட்டி ஒன்றில் ‘கூலி’ 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் எனத் தெரிவித்திருந்தார். இதனால், ரசிகர்களிடையே படம் பற்றிய ஆர்வம் அதிகரித்துள்ளது. அத்துடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கைதி, விக்ரம், லியோ போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர். இதனால், ரஜினிகாந்துடன் அவர் இணைந்து இயக்கும் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் எனக் கூறப்படுகிறது.


சமீபத்தில், நடுவர் அந்தணன் இப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் எனத் தெரிவித்துள்ளது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறுகையில் “ரஜினியும், லோகேஷ் கனகராஜும் இணையும் ‘கூலி’ படம் 1000 கோடி வசூலை எட்டும் என்றதுடன் இது உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய வெற்றி கொடுக்கலாம்” எனவும் தெரிவித்தார். இதனைக் கேட்ட ரசிகர்கள் படத்தினை திரையரங்குகளில் பார்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement

Advertisement