தெலுங்கில் வெளிவந்த சௌர்யம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் சிறுத்தை சிவா. இதன்பின் தமிழில் என்ட்ரி கொடுத்து சிறுத்தை படத்தை இயக்கினார். இந்த படம் தந்த ரீச் அவரை சிறுத்தை சிவா என்று அனைவரும் அழைக்க துடங்கினர்.

சிறுத்தை படத்தை தொடர்ந்து அடுத்து அடுத்து அஜித்துடன் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை எடுத்தார். பின் ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கினார். சிறுத்தை சிவா இயக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ள கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
d_i_a

நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த நிலையில், கங்குவா படத்தை இயக்குவதற்காக இயக்குனர் சிவா ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை அடுத்து கங்குவா திரைப்படமும் 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
Listen News!