இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில், தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக வெற்றி பெற்று இலங்கையின் ஜனாதிபதியானார். இந்நிலையில் நேற்று இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
நேற்று இரவில் இருந்து இன்று மதியம் வரை வாக்கு எண்ணிக்கை செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்றது. இதனையடுத்து தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. இதில், தபால் வாக்குகளில் அனைத்து இடங்களிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது . மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் காலை 10 மணி வரை வெளியான பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி 123 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
d_i_a
தற்போது கிடைத்த தகவலின் படி இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் எந்தவொரு பிரேரணை மற்றும் சட்டங்கள் எந்தவொரு கட்சியின் ஆதரவின்றி நிறைவேற்ற முடியும். இவருக்கு அரசியல் வாதிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து டுவிட் பதிவிட்டுள்ளார் அனுரகுமார திசாநாயக்க.
පුනරුද යුගය ඇරඹීමට උරදුන් සැමට ස්තූතියි!
மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி!
Thank you to all who voted for a renaissance!
Listen News!