• May 20 2024

ராதிகாவிற்கு முன்னாலேயே அவருடைய தங்கையை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்- சூப்பர்ஸ்டாரால் வளர்ந்த பகை.!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத பழம் பெரும் மறைந்த நடிகர் தான்  எம்.ஆர். ராதா. இவருடைய நகைச்சுவைக்கு என்று தற்பொழுதும் தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.இவரைத் தொடர்ந்து இவருடைய பிள்ளைகளான ராதிகா ராதா ரவி நிரோஷா ஆகியோரும் சினிமாவில் ஜொலித்து வந்தனர்.

 நிரோஷா அக்னி நட்சத்திரம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதனிடையே நிரோஷா படங்களில் நடிக்க ஆரம்பித்தவுடன் ராதிகாவை விட இவருக்கு அதிகம் ரசிகர்கள் 80 காலகட்டங்களில் இருந்தார்கள்.


அக்கா தங்கைக்கு இடையே பல போட்டிகளும் அன்றைய காலக்கட்டத்தில் இருந்ததாக பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது. இந்நிலையில் நடிகை ராதிகா ஹிந்தியில் சில படங்களில் 80 காலக்கட்டங்களில் நடித்து வந்தார். அதில் முக்கியமாக 1990 ஆம் ஆண்டு வெளியான ஆஜ் கா அர்ஜுன் என்ற படத்தில் அமிதாப் பச்சனுடன் ராதிகா நடித்திருப்பார்.

இத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த ராதிகா நான் உங்களது மிகப்பெரிய ரசிகை என அமிதாப் பச்சனிடம் தெரிவித்தாராம். உடனே அமிதாப் பச்சனும் நன்றி கூறியது மட்டுமில்லாமல், உங்கள் தங்கை தானே நிரோஷா என்று கேள்விக் கேட்டுள்ளார்.அதற்கு ஆமாம் என்று பதிலளித்த ராதிகாவிடம், நான் உங்கள் தங்கையின் மிகப்பெரிய ரசிகர் அவரது திரைப்படங்களை பலமுறை பார்த்துள்ளேன் என ராதிகாவிடம் அமிதாப் பச்சன் தெரிவித்தாராம்.மேலும் ராதிகாவை அவரது கேரவனுக்கு அழைத்து சென்று அங்குள்ள பல இடங்களில் நிரோஷாவின் புகைப்படத்தை ஒட்டி வைத்து ரசித்து வந்ததை காண்பித்துள்ளார் அமிதாப் பச்சன் . மேலும் நிரோஷாவை நான் சந்திக்க வேண்டும் என ராதிகாவிடம் கோரிக்கை விடுத்தாராம் . இதையெல்லாம் பார்த்து நிரோஷா மேல் செம காண்டானாராம் ராதிகா. பின்னர் நிரோஷாவை அழைக்க சென்ற போது அவருக்கு கால் உடைந்து கட்டுப்போட்டு இருந்ததாம்.


இதன் காரணமாக நொண்டி நொண்டி நடந்து வந்தாராம் நிரோஷா. இதைப்பார்த்த ராதிகா சற்று பெருமூச்சு விட்டு நிரோஷாவை அமிதாப் பச்சன் முன்னாள் அழைத்து சென்றாராம். நிரோஷா நொண்டி நொண்டி வருவதை பார்த்த அமிதாப் பச்சான், அவரை நாற்காலியில் அமர வைத்து, உங்கள் அக்கா என் தீவிர ரசிகை ஆனால் நான் உங்களின் ரசிகையென நிரோஷாவிடம் சொன்னாராம் அமிதாப் பச்சன். இது ராதிகாவை மேலும் கடுப்படைய வைத்ததாக பேட்டியில் பகிர்ந்துகொண்டார் ராதிகா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement