சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் முத்து, ரவி ஜோடிகளுக்கு முதல் இரவு ஏற்பாடு செய்கின்றார் பாட்டி. அதற்காக விஜயாவை பால் எடுத்து வரச் சொல்கின்றார். அதன் பின்பு அடுத்த வருடம் இருவருமே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என கண்டிஷன் போடுகின்றார்.
இதைத் தொடர்ந்து தான் வெளியே சென்று வருவதாக விஜயாவிடம் சோகமாகச் சொல்லிவிட்டு செல்கின்றார் மனோஜ். இதனால் விஜயாவும் அவருக்கு கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி அனுப்புகின்றார்.
இதைத் தொடர்ந்து கனகா வீட்டுக்குச் சென்ற மனோஜ் அங்கு அவருடன் விளையாடுகின்றார். இறுதியில் தோற்றுப் போனதும், எல்லாம் சொத்து என்னுடைய பெயருக்கு மாற மட்டும்தான். அதற்குப் பின்பு உங்களுக்கு இருக்கு என்று மனதுக்குள் எண்ணிக் கொள்கிறார்.

இன்னொரு பக்கம், முத்து, மீனா ஆகிய இருவரும் பாலை குடித்துவிட்டு பழைய நினைவுகளை நினைத்துப் பார்த்து சந்தோஷமாக இருக்கின்றார்கள். அதே நேரத்தில் ரவி, ஸ்ருதியும் இந்தக் கல்யாணம் தங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததாகப் பேசிக் கொள்கின்றனர்.
இறுதியில் முத்துவின் நண்பர் அவரிடம் வந்து தன்னுடைய குழந்தைக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டதாகவும், பண உதவி வேண்டும் என்றும் கூறுகின்றார். இதனால் முத்து அவருக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பி, குழந்தையை நினைத்து வருந்துகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!