• Oct 08 2024

மஞ்சள் வீரன் படத்துல இருந்து சூப்பர் ஸ்டாரை தூக்கிய இயக்குனர்! பேரதிர்ச்சியில் TTF வாசன்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் ஹீரோவாக அறிமுகமாக உள்ள திரைப்படம் தான் மஞ்சள் வீரன். இந்த படத்தை செல்அம் என்பவர் இயக்கி வருகின்றார். அவர் ஏற்கனவே திருவிக பூங்கா என்ற படத்தை இயக்கியுள்ளார்.

மஞ்சள் வீரன் படம் பூஜை விழாவில் இருந்தே இந்த படத்தின் சர்ச்சையும்  ஆரம்பிக்கப்பட்டதோடு சமூக வலைத்தளங்களில் கிண்டல், ட்ரோல்களுக்கு உட்பட்டவாறு உள்ளன. சில நாட்களுக்கு முன்பு மதுரையில் கார் ஓட்டிக்கொண்டு தொலைபேசி பேசியபடி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் வாசன் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்பு அவர் பிணையில் வந்தார். இவ்வாறு  சர்ச்சைகளில் சிக்கி போலீசில் மாட்டிக் கொள்வதும் மீண்டும் வெளியே வருவதுமாக காணப்படுகின்றார்.

இதை தொடர்ந்து டிடிஎஃப் வாசனின் அடுத்த படம் குறித்த தகவலும் வெளியானது. அந்தப் படத்திற்கு ஐபிஎல் என்ற தலைப்பு வைக்கப்பட்டது. இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கருணாகரன் அந்தப் படத்தை இயக்குகின்றார். இதற்கு விநாயகமூர்த்தி இசையமைக்க உள்ளார்.


இந்த படத்தின் இரண்டாம் கட்ட போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. ஐபிஎல் படத்தில் கிஷோர், அபிராமி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். அந்த படத்தில் டிடிஎஃப் வாசனின் போஸ்டரும் சிறப்பாக காணப்பட்டது.

இந்த நிலையில், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசனை நீக்குவதாக அப்படத்தின் இயக்குனர் செல்அப் அறிவித்துள்ளார். அதன்படி இந்த படத்தில் அவர் தான் சூப்பர் ஸ்டார், ஆனால் படத்துல இருந்து அவரை தூக்குகின்றோம் என தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி உள்ளது.

Advertisement