கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் "ரெட்ரோ " இந்த படம் மே மாதம் முதலாம் திகதி வெளியாகவுள்ளது. படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. படத்தின் இரண்டு பாடல்களும் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் வைரலாகி வருகின்றது. அதுவும் இரண்டாவதாக வெளியாகிய "கனிமா " பாடல் ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்களின் மத்தியிலும் வைரலாகியுள்ளது. தற்போது இந்த பாடலிற்கு ரீல்ஸ் செய்யாத ஆளே இல்லை.
படம் வெளியாகி கங்குவா தோல்வியினை மறக்க செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் தற்போது படத்தின் டப்பிங் வேலைகள் முடிவடைந்துள்ளதை இயக்குநர் சிறிய வீடியோ பதிவு ஒன்றின் மூலம் கூறியுள்ளார்.
இந்த வீடியோவில் சூர்யா ரெட்ரோ டப்பிங் வேலைகள் முடிந்து விட்டது cut and rightu என கூறுகின்றார். இறுதியில் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இருவரினதும் புகைப்படங்களை ghibli வடிவில் மாற்றி அந்த வீடியோவினை முடித்துள்ளனர். வீடியோ இதோ..
Listen News!