2016 ஆம் ஆண்டு முன்னனி இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் "இறுதிச்சுற்று" இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக எழில் மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரித்திகா சிங். இப் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகின்றார்.
இவர் அதன் பின்பு விஜய் சேதுபதி ஜோடியாக "ஆண்டவன் கட்டளை", ராகவா லாரன்ஸ் ஜோடியாக "சிவலிங்கா" மற்றும் அசோக் செல்வனுடன் "ஓ மை கடவுளே" படங்களில் நடித்தார்.அதன் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் "வேட்டையன்" என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த நிலையில் நடிகை தற்போது சிம்பிளாக போட்டோசூட் நடாத்தி அதன் போது எடுத்து கொண்ட புகைப்படங்களினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இப்போது அவரது லேட்டஸ்ட் ஸ்டில்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகின்றது. இதற்கு பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!