மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ,திரிஷா , அர்ஜுன் ,ரெஜினா ஆகியோர் நடித்து 6 ஆம் திகதி வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் கலவனான விமர்சனங்களினை பெற்று ஓரளவுக்கு வசூலித்து வருகின்றது. படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமையினால் ரசிகர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
இயக்குநர் தற்போது பல சமூக ஊடகங்களிற்கு நேர்காணல் கொடுத்து வருகின்றார். படம் தொடர்பில் பல விடயங்களினை கலந்துரையாடிவரும் இவர் ஆரம்பத்தில் ட்ரைலர் வெளியாகியபோது எழுந்துள்ள சர்ச்சை ஒன்றிற்கு விளக்கம் அளித்துள்ளார்.
குறித்த பேட்டியில் "விடாமுயற்சி ட்ரைலரில் வர்ற அந்த நடிகர் அஜர்பைஜானில் இருந்தவர். எங்களுக்கு படப்பிடிப்பு செய்தப்போ அவர் அஜித் சார் மாதிரியே இருக்கார்னு தெரியல. ட்ரைலர் கட் பண்ணும்போது கூட தெரியல. ட்ரைலர் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் எல்லாரும் சொன்னப்ப தான் எங்களுக்கே தெரிஞ்சது அவரு பாக்க அஜித் சார் மாதிரியே இருக்கார்னு" என கூறியுள்ளார்.
Listen News!