• Jan 19 2025

சின்னத்திரையை உலுக்கிய சீரியல் நடிகைகளின் மரணம்! அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த சகோதரிகள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் நடித்து வந்த சகோதரிகள் இருவர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை நடிகையான டோலி சோஹி, இந்தியில் கலாஷ், மேரி துர்கா, கும்கும் பாக்யா, ஜனக், பரினீதி உட்பட பல சீரியல்களில் நடித்துள்ளார்

இவர் கடந்த சில மாதங்களாகவே கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். 


இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழக்கும் போது அவருக்கு வயது 47.

அத்துடன், டோலி சோஹியின் சகோதரியும் சின்னத்திரை நடிகையுமான அமன்தீப் சோஹி என்பவர் அவருக்கு முன்தினம்  உயிரிழந்துள்ளார்.


இவரும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு சகோதரிகள் ஆன அமன்தீப் சோஹி காலமான மறுநாள் அவரது சகோதரி மரணம் அடைந்திருப்பது அவர்களது குடும்பத்தை மட்டும் இன்றி சின்னத்திரை உலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சின்னத்திரை நடிகைகளும் சகோதரிகளுமான அமன்தீப் சோஹி,  டோலி சோஹி ஆகிய இருவருக்கும் சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என தகவல் அறிந்த அனைவரும் சமூக வலைத்தளங்களில் தமது இரங்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement