• Jan 19 2025

வேட்டையன் ரிலீஸுக்கு லீவும் கொடுத்து Free டிக்கெட்டும் கொடுத்த நிறுவனம்?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்தின் 170 வது திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். இவர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தை இயக்கியவர். இதன் காரணத்தினாலேயே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் காணப்படுகின்றது.

பான் இந்திய படமாக உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி நாளைய தினம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

வேட்டையன் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கின்றார். மேலும் இவர்களுடன் அமிர்தா பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக ரஜினிகாந்த் நடிக்கின்றார்.


இந்த நிலையில், வேட்டையன் படம் ரிலீஸ் ஆகும் போது தமது அலுவலர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது பிரபல நிறுவனம் ஒன்று. இந்த தகவல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள வாஸ்கோ என்ற தனியார் நிறுவனம் எதிர்வரும் அக்டோபர் 10-ம் திகதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆவதை கொண்டாடும் விதமாக தமது அலுவலக ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வேட்டையன் பட டிக்கெட்டையும் இலவசமாக புக் செய்து கொடுத்துள்ளது. 

Advertisement

Advertisement