• Jan 19 2025

பவித்ராவை பார்த்து விஷால் சொன்ன ஒரு வார்த்தை.. பயங்கரமாக வெடித்த சண்டை

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 ஆரம்பிக்கப்பட்டு இன்று மூன்றாவது நாள் நடைபெறுகின்றது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார். இந்த முறை இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களாக  ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே பவித்ரா, முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

மேலும் இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற காரணத்தினால் பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒரு புறம் பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதில் ஆண்கள் அணி ஒற்றுமையாக செயல்பட்டு வந்தாலும் பெண்கள் அணிக்குள் சில சச்சரவுகள் ஏற்படுகின்றன.

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக 24 மணி நேரத்திற்குள் எலிமினேஷன் நடத்தப்பட்டது. அதில் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சச்சனா எலிமினேட் செய்யப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், பிக் பாஸ் ஆரம்பிக்கப்பட்டு மூன்றாவது நாளான இன்று முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

குறித்த ப்ரோமோவில் பவித்ராவுக்கும் விஷாலுக்கும் இடையே சண்டை இடம்பெறுகின்றது. அதில் பவித்ரா தான் எத்தனையோ வாட்டி சொல்லி உள்ளேன் டி சொல்லாதே என்று ஆனால் விஷால் திரும்ப சொன்னதாக சொல்லுகின்றார். ஆனாலும் விஷால் தனது பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துச் சொல்ல, இரு அணியினரும் பவித்ராவையும் விஷாலையும் சமாதானப்படுத்துகின்றார்கள் . இருந்தாலும் வாக்குவாதம் தொடர்கிறது. இதுதான் முதலாவது ப்ரோமோ. 


Advertisement

Advertisement