• Sep 29 2024

விடாமுயற்சி படத்திற்கு இவ்வளவு டிமாண்டா? கோடிகளை கொட்டி வாங்கிய நிறுவனம்?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திரமாக காணப்படும் நடிகர் அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகின்றார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், நடிகர் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் பிரபலமான ஆரவ் மற்றும் ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நேற்றைய தினம் அசர்பைஜானில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இது தொடர்பான  புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.


விடாமுயற்சி படத்தை எதிர்வரும் தீபாவளி தினத்தில் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதற்காக அஜித்தின் தீவிரவாத ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துக் காத்து உள்ளார்கள்.

இந்த நிலையில், அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஓடிடி  உரிமத்தை  நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அதன்படி இந்த படத்திற்கு சுமார் 75 கோடி ரூபாய் கொடுத்து  நெட்பிளிக்ஸ்  நிறுவனம் வாங்கியுள்ளதாம். தற்போது இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement