• Jan 19 2025

ஐக்கிய ராச்சியம் பூராவும் என் ராச்சியம் தான் சொல்லாமல் சொல்லும் இந்தியன் - 2 !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் சங்கர் கதை மற்றும் திரைக்கதையில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்தியன் 2 திரைப்படமானது 1996 ஆம் ஆண்டு இதே கூட்டணியில் வெளியாகிய மிரட்டல் திரைப்படமான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாகும்.

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' ஜூன் மாதம் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு | kamal  haasan starrer indian 2 movie release date announced - hindutamil.in

கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப் படத்தில் கமல் சேனாதிபதியாகவே தோன்றுகிறார்.இசை வெளியீடு , திரையிடலுக்கான தேதி அறிவிப்பு என படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

ரசிகர்கள் அனைவரின் கண்களும் 'இந்தியன் 2' டிரைலரை நோக்கி…

இந்நிலையில் தற்போது வெளியாகிய செய்தியொன்று ரசிகர்களுக்கு பெரும் உட்சாகத்தை கொடுத்தது என்றே சொல்லலாம். உலக அளவில் வருகிற மாதம் 12 ஆம் திகதி முதல் வெளியாகவிருக்கும் இந்தியன் 2 திரைப்படமானது ஐக்கிய ராச்சியத்தில் மட்டும் 500 இற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக உத்தியோக பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement